இஸ்ரேலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வரும் அரபு நாடுகள்!
இஸ்ரேல் – காசா பகுதியில் உள்ள வைத்தியசாலை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு நெருக்கடி நிலை மேலும் அதிகரித்துள்ளது.
போரை தீர்க்க விரைவில் தீர்வு காணவிட்டால் காசா நெருக்கடி மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பரவும் என்று சர்வதேச விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சேதமடைந்த வைத்தியசாலையின் இடிபாடுகளில் 1000க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சிறு குழந்தைகள் மற்றும் பெண்கள் என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் வான்தாக்குதலுக்கு பயந்து வெளியேறும் பலர் பாதுகாப்புக் கோரி வைத்தியசாலையில் தங்கியிருந்தமையே குறித்த தாக்குதலில் அதிகமானோர் உயிரிழந்தமைக்கான காரணமாகும்.
இதேவேளை, பாலஸ்தீனத்தில் உள்ள தேவாலயம் ஒன்றின் உதவியுடன் பராமரிக்கப்பட்டு வருவதால் பலர் அங்கு தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் தான் காரணம் என இஸ்ரேல் கூறினாலும், பாலஸ்தீன போராளிகள் குழுவினால் ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் கூறுகிறது.
இந்த தாக்குதல் காரணமாக பல அரபு நாடுகள் இஸ்ரேலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
துருக்கி மற்றும் ஜோர்தானில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்களுக்கு முன்பாக போராட்டம் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலுக்கு எதிராக ஈரானில் உள்ள பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் தூதரகங்கள் முன்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் இஸ்ரேலுக்கு ஆதரவான செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்த தாக்குதலுடன் பல அரபு நாடுகளில் இஸ்ரேலுக்கு கடும் எதிர்ப்பு உருவாகி வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இஸ்ரேலின் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக சவுதி அரேபியா, ஜோர்தான், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், ஈராக் ஆகிய நாடுகள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் போர்க்குற்றம் என்று அந்த நாடுகள் கூறுகின்றன.
இந்த நிலையில், ஜோர்தானில் நடைபெறவிருந்த அமெரிக்க அதிபதி ஜோ பைடனுடனான சந்திப்பை இரத்து செய்ய அரபு நாட்டு தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
காசாவில் உள்ள வைத்தியசாலை மீதான தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.