இன்று காலை கனடாவின் நிகழ்ந்த விமான விபத்து: இந்திய விமானிகள் இருவர் பலி
கனடாவில் இன்று அதிகாலை நிகழ்ந்த விமான விபத்தொன்றில் இந்திய விமானிகள் இருவர் பலியான சம்பவம் சோகத்தை உருவாக்கியுள்ளது.
இன்று நிகழ்ந்த துயர சம்பவம்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், சிறிய விமானம் ஒன்று, இந்திய நேரப்படி, அதிகாலை 2.30 மணியளவில் விபத்துக்குள்ளானதாக கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
வான்கூவருக்கு கிழக்கே 200 கிலோமீற்றர் தொலைவிலுள்ள Chilliwack என்னுமிடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்தியர்கள் உட்பட மூன்று பேர் பலி
இந்த துயர சம்பவத்தில், மும்பையைச் சேர்ந்த இந்தியர்கள் இருவர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
உயிரிழந்த இந்தியர்களின் பெயர்கள் முறையே, Abhay Gadroo மற்றும் Yash Vijay Ramugade என்றும், அவர்கள் இருவரும் பயிற்சி விமானிகள் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தை நேரில் பார்த்த Haylie Morris என்னும் பெண், தன் கண்களுக்கு முன்னே விமானம் ஒன்று வானிலிருந்து விழுவதை தான் கண்டதாக தெரிவித்துள்ளார். கனேடிய பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவருகிறார்கள்.