இறுதி ஊர்வலத்தின்போது 25 பேர் துப்பாக்கி முனையில் கடத்தல்! பரபரப்பு சம்பவம்

நைஜீரியாவில் இடம்பெற்ற இறுதி ஊர்வலத்தின் போது 25 பேர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இறுதி ஊர்வலத்தின்போது 25 பேர் துப்பாக்கி முனையில் கடத்தல்! பரபரப்பு சம்பவம்
நைஜீரியாவின் தென்மேற்கு மாகாணமான ஒட்டோவில் உயிரிழந்த நபர் ஒருவரின் இறுதிச்சடங்கு ஊர்வலம் நடைபெற்றது.

குறித்த இறுதி ஊர்வலத்தில் உயிரிழந்தவரின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் அவர்களை சுற்றி வளைத்துள்ளனர்.

இறுதி ஊர்வலத்தின்போது 25 பேர் துப்பாக்கி முனையில் கடத்தல்! பரபரப்பு சம்பவம்
இதனையடுத்து, துப்பாக்கி முனையில் சுமார் 25 பேரை அவர்கள் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால் கடத்தி சென்றவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? என்பது இன்னும் தெரியவில்லை.

எனவே பொலிஸார் வழக்கு பதிவு செய்து, அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button