மொரோக்கோ நிலநடுக்கத்திற்கு முன் வானில் தோன்றிய மர்மமான ஒளி!
மொரோக்கோவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்னர் வானத்தில் மர்மமான ஒளி தென்பட்டதாக சமூக ஊடகத் தளங்களில் காணொளி ஒன்று விரிவாகப் பகிரப்படுகிறது.
அந்த காணொளியில் வானத்தில் திடீரென்று நீல வெளிச்சம் தோன்றுகிறது. சில நொடிகளில் அது மறைந்த நிலையில் மீண்டும் ஒளி தோன்றுகிறது.
நிலநடுக்கம் ஏற்படும் இடங்களில் வானத்தில் அத்தகைய ஒளி தென்படுவது வழக்கம். பல நூற்றாண்டுகளுக்கு முன்புகூட அப்படி ஒளி காணப்பட்டது.
18, 19, 20 ஆகிய நூற்றாண்டுகளில் கிட்டத்தட்ட 65 நிலநடுக்கச் சம்பவங்களில் ஒளி தென்பட்டதாகப் வரலாற்றுப் பதிவுகள் உள்ளன.
சிலவேளை ஒளி மின்னல் வேகத்தில் மறைந்துவிடும். சில சமயம் அது பல நிமிடங்கள் மிளிரும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஒளி பல்வேறு வண்ணங்களிலும் தோன்றுவது உண்டு. அது ஏன் ஏற்படுகிறது என்பது மர்மமாகவே உள்ளது.
வானத்து ஒளிக்கும் நிலநடுக்கத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பது தெரியவில்லை என கூறப்படுகின்றது.