இலங்கைக்கு நேபாள மனித கடத்தல்காரர் அனுப்பிய முகவர்!
இலங்கைக்கு முகவர்களை நேபாள மனித கடத்தல்காரர் ஒருவர் அனுப்பியுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்படி, நேபாள மக்களை பல்வேறு வெளிநாடுகளுக்கு கடத்திய குற்றச்சாட்டின் பேரில் நேபாளத்தின் ருகும் பகுதியைச் சேர்ந்த ஒருவரை நேபாள பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர்கள் அமெரிக்காவில் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது டெக்சாஸில் வசிக்கும் 52 வயதான ஹஸ்தா கௌதம், தனது வாடிக்கையாளர்களை பல்வேறு நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி 20 மில்லியன் ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக நேபாள பொலிஸின் மனித கடத்தல் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஹஸ்தா கௌதம் கடத்தல் நடவடிக்கையின் மூளையாக இருந்து இதுவரை சுமார் 200 நேபாள நபர்களை அமெரிக்காவிற்கு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இலங்கை, கொலம்பியா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் 5 முகவரங்களை நியமித்து பல்வேறு நாடுகளில் முகவர்களை பணியில் அமர்த்தியது விசாரணையில் தெரியவந்தது.
முகவர்கள் மூன்று பேருக்கு எதிராக 5 வழக்குகளை பதிவு செய்த பின்னர் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்தது. பாதிக்கப்பட்ட 4 நபர்களை பொலிஸார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
மேலும் 2 பேர் இன்னும் மீட்புக்காக காத்திருக்கிறார்கள் என்று துணை பொலிஸ் சூப்பிரண்டு கியான் பகதூர் பிஸ்டா தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி 13 பேரை வழிமறித்ததாக அவர் மீது புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கௌதமின் முகவர்கள் பல்வேறு நாடுகளுக்கு வந்த வாடிக்கையாளர்களிடம் இருந்து கடவுச்சீட்டு மற்றும் கையடக்க தொலைபேசிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து கணிசமான தொகையை கோரியதாக பிஸ்டா மேலும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக முகவர்கள் அவர்களை துன்புறுத்தல்களுக்கு உட்படுத்துவதுடன், அவர்கள் கோரிக்கைகளுக்கு இணங்க மறுத்தால் விற்பார்கள் அல்லது கைவிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீதிமன்றத்தால் ஏழு நாள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று பிஸ்டா மேலும் தெரிவித்துள்ளார்.