இலங்கை தொடர்பிலான காணொளிகளை சற்று முன்னர் நீக்கிய சேனல் 4!
இலங்கையில் ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய வீடியோவை ஒளிபரப்பிய இங்கிலாந்தின் சேனல் 4, வீடியோக்களை அகற்றியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
அதன் இணையதளம் உட்பட அனைத்து சமூக வலைத்தளங்களிலிருந்தும் இலங்கை தொடர்பிலான சர்ச்சைக்குரிய வீடியோவை சேனல் 4 நீக்கியுள்ளது.
நாமல் எழுப்பிய கேள்வி
அதேவேளை ராஜபக்ஷேக்களுடன் செனல் 4 இற்கு 2009 ஆம் ஆண்டு யுத்த முடிவிலிருந்து வரலாற்று ரீதியிலான பகை இருப்பதாகத் தெரிவித்த நாமல் ராஜபக்ச, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் செனல் 4 வெளியிட்ட காணொளிகளில் நம்பகத்தன்மை இருக்குமானால் அதை எதற்காக அவர்கள் தமது இணையத்தளத்திலிருந்து நீக்க வேண்டுமென இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பயங்கரவாதத்தை ஒழித்ததற்காக ராஜபக்ஷேக்களைப் பழி வாங்குவதற்கான இன்னுமொரு முயற்சியாக இது இருக்கலாம், அல்லது சிலரின் அரசியல் நோக்கங்களைத் திருப்திப்படுத்துவதற்காக செனல் 4 புதிய வீடியோவை வெளியிட்டு இருக்கலாம் என நாமல் தெரிவித்தார்.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின் எனது குடும்பத்துடனும் எனது தந்தை மற்றும் ராஜபக்ஷ என்ற பெயருடனும் செனல் 4 வரலாற்றுப் பகையைக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படக் கூடாது, அது அரசியல் மயமாக்கப்படுவது சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்குத் தடையாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.