மக்களை ஏமாற்றிய பெண்ணின் திருகுதாளங்கள் அம்பலம்.!

மக்களை ஏமாற்றிய பெண்ணின் திருகுதாளங்கள் அம்பலம்.! காலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பெருந்தொகையான மக்களுக்கு அதிக இலாபம் தருவதாகக் கூறி ஏமாற்றி வந்த பெண் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிரோஷா நிஷாந்தி, காலியிலுள்ள அவரது இல்லத்திற்கு செல்ல சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

23 64ed8e0888be6

சட்டவிரோதமாக மக்களை ஏமாற்றி பெற்ற பணத்தில் கட்டியதாக கூறப்படும் வீட்டை சட்டவிரோதமாக விற்க தயாராகி வருவதாக கிடைத்த தகவல் காரணமாக அந்த வீட்டை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றச்செயல்
மேலும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களிடம் பணம் கேட்டு திரும்பி வரும்போது பணம் கொடுத்தவர்களை இந்த பெண் மிரட்டுவதும் தெரியவந்துள்ளது.

தன்னிடம் பணம் கேட்டு வரும் ஆண்களை வீட்டிற்குள் அழைத்து வந்து கட்டிப்பிடித்து, பின்னர் முழுவதையும் வீடியோ எடுத்து அந்த நபர்களை பயமுறுத்துவது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாடு
இதனால், பணம் கொடுத்த பல ஆண்கள் அவர் மீது முறைப்பாடு கொடுப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த பெண் செய்த மோசடிகளுக்கு ஊழல் நிறைந்த பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பல ஊழல் அதிகாரிகளும் துணை நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பெண்ணிடம் 2 முதல் 3 கோடி ரூபாய் முதலீடு செய்து பலர் சிக்கியுள்ளனர்.

இதற்கிடையில் தென்பகுதியில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற விகாரையின் கப்புவா என்ற நபரும் இணைந்து செயற்படுவதாக கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button