உலகை உலுக்கிய சிரியா நிலநடுக்கம்; கட்டடத்தின் அடியில் பிறந்த ‘அதிசய’ குழந்தை எப்படி இருக்கின்றார்?
கடந்த வருடம் பிப்ரவரி மாதம் உலகை உலுக்கிய சிரியா நிலநடுக்கத்தில் , இடிந்துபோன ஒரு கட்டிடத்திற்கு அடியில் பிறந்தார் குழந்தை ஆஃப்ரா.
நிலநடுக்க இடிபாடுகளிலிருந்து அவர் வெளியே எடுக்கப்படும் வீடியோ வைரல் ஆனது. அந்த நிலநடுக்கத்தில் ஆஃப்ராவின் பெற்றோரும், நான்கு உடன்பிறந்தவர்களும் இறந்தனர்.
மாமாவிடம் வளரும் ஆஃரா
இந்நிலையில் அப்போது ஆயிரக்கணக்கானோர், ஆஃராவைத் தத்தெடுத்துக்கொள்ள முன்வந்தனர். எனினும் மரபணு பரிசோதனைக்குப் பிறகு குழந்தை அவளது அத்தை-மாமாவிடம் கொடுக்கப்பட்டது.
ஆறு மாதங்கள் கழித்து இப்போது ஆஃப்ராவை அவரது மாமாவும் அத்தையும் வளர்த்து வருகிறார்கள். ஏற்கனவே குறித்த தம்பதிகளுக்கு ஏழு குழந்தைகள் உள்ள நிலையில் அவர்களோடு ஆஃப்ராவவும் வளர்கிறாள்.
இந்நிலையில் இடிபாடுகளில் இருந்து பிறந்த ஆஃப்ரா ‘அதிசயக் குழந்தை’ என்று அழைக்கப் படுகிறார்.
துருக்கி- சிரியா எல்லையில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.