நான்கு ஆண்டுகளுக்கு முன் மாயமான சிறுமி: திடீரென இளம்பெண்ணாக வந்து நின்று கொடுத்த அதிர்ச்சி

நான்கு ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் மாயமான சிறுமி ஒருத்தி, 18 வயது இளம்பெண்ணாக திரும்பிவந்து இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார்.

மாயமான இளம்பெண்ணால் பதற்றம்

அமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்த அலிஷியா  2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திடீரென மாயமானார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் மாயமான சிறுமி, திடீரென இளம்பெண்ணாக வந்து ,நின்று கொடுத்த அதிர்ச்சி
அவளை ஒன்லைனில் சந்தித்த யாரோ ஏமாற்றி, எங்கோ கொண்டு சென்றுவிட்டதாக அவளது தாயார் புகாரளிக்க, பொலிசார் அவளை தீவிரமாகத் தேடிவந்தார்கள்.

பொலிஸ் நிலையத்துக்கு வந்த இளம்பெண்

இந்நிலையில், திடீரென கனடா எல்லையிலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றிற்குள் இளம்பெண் ஒருவர் நுழைந்துள்ளார். தான்தான் காணாமல் போன அலிஷியா என அவர் கூற, பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளர்கள்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் மாயமான சிறுமி, திடீரென இளம்பெண்ணாக வந்து ,நின்று கொடுத்த அதிர்ச்சி
ஒரு பக்கம், அலிஷியா உயிருடன் பத்திரமாக வீடு திரும்பிய விடயம் அவளது பெற்றோருக்கும் அதிகாரிகளுக்கும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தினாலும், மறுபக்கம், அவள் எங்கு சென்றால், நான்கு ஆண்டுகளாக எங்கிருந்தாள் என்பது குறித்த விடயங்கள் தெரியாததால் பொலிசார் திகைப்படைந்துள்ளார்கள்.

அலிஷியா சற்று ரிலாக்ஸ் ஆக நேரம் கொடுத்துள்ள பொலிசார், அவளுக்கு என்ன ஆனது என்பது குறித்து பின்னர் விசாரிக்க முடிவு செய்துள்ளார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button