திடீரென தீப்பிடித்து எரிந்த சரக்கு கப்பல் ; 3000 கார்கள் எரிந்து சேதம்; இந்தியர் பலி
நெதர்லாந்தில் சரக்கு கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3000 கார்கள் எரிந்து சேதம் அடைந்ததுடன் இந்த தீ விபத்திஒல் இந்திய மாலுமி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெர்மனியில் இருந்து எகிப்துக்கு பனாமா நாட்டின் சரக்கு கப்பல் 3000 கார்களை ஏற்றுக் கொண்டு சென்றது. நெதர்லாந்து அருகே வடக்கு தட்ச் தீவான அமலாஞ்சின் வடக்கே 50 கிமீ தொலைவில் சரக்கு கப்பல் திடீரென தீப்பற்றி எரிந்தது.
3000 கார்கள் எரிந்து சேதம்
கப்பலில் இருந்த 23 பணியாளர்கள் தீயை அடைக்க முயற்சித்தபோதும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து தகவல அறிந்து 2 கப்பல்களில் விரைந்த தட்ச் கடலோர காவல்படை வீரர்கள் 2 புறங்களில் இருந்தும் தீயை அணைக்க பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சரக்கு கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3000 கார்கள் எரிந்து சேதம் அடைந்ததுடன் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்த நிலையில் பலர் காயம் அடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் உடனடியாக அனுப்பி வைங்கப்பட்டன. விரைந்து செயல்பட்ட நெதர்லாந்து கடலோர காவல்படையினர் கப்பலில் இருந்து பணியாளர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்ட மின்சார காரில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ள நிலையில் அது தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறதாக கூறப்படுகின்றது.