இளம் யுவதியை பலமுறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை! நீதிமன்றத்தின் உத்தரவு
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மொக்கா தோட்ட மேற் பிரிவில் தந்தை ஒருவர் தனது 20 வயதுடைய மகளுக்கு நஞ்சு பருக்கியதாக சந்தேகத்தின் பேரில் கடந்த 03-05-2023 ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டு 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை, மேலுமொரு குற்றச்சாட்டுக்கு உள்ளாகி நேற்று 17.05.2023.அன்று ஹட்டன் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட வேலையில் சந்தேக நபரை மீண்டும் எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் பனித்துள்ளார்.
இவ்வாறு மீண்டும் விளக்கமறியல் சென்றவர் மொக்கா தோட்ட மேற் பிரிவில் உள்ள 48 வயது உடைய மூன்று பெண் குழந்தைகளின் தந்தையாவார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இச் சம்பவம் நேற்று கடந்த 2.ம் திகதி மொக்கா தோட்ட மேற் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
நஞ்சு பருக்கியதாக கூறப்படும் 20 வயதுடைய பெண் கடந்த 2 ம் இரவு மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டு அங்கு சிகிச்சை பெற்று வரும் வேளையில் சட்ட வைத்திய அதிகாரியிடம் தனது தந்தை தனக்கு நஞ்சு பருக்கியதாக கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார பணிப்புரையின் கீழ் சந்தேக நபரை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்ய முற்பட்ட வேளையில் அவர் டிக்கோயா பகுதியில் உள்ள டில்லிரி பகுதியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த வேளையில் அங்கு வைத்து கடந்த 2 ம் திகதி இரவு சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சட்ட வைத்திய அதிகாரி பரிசோதனையின் பின்னர் இந்த இளம் யுவதி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட உள்ளது தெரியவந்ததுள்ளது.
அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
யுவதி நேற்றையதினம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று நேற்று 17.05.2023 வெளியேரும் போது சட்ட வைத்திய அதிகாரி பரிசோதனையின் பின்னர் அந்த யுவதி பல முறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
யுவதியிடம் கேட்ட போது யுவதி தன்னை தனது தந்தை பல முறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதை கூறியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து சந்தேக நபரை நேற்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டதாகவும் அப்போது நீதிவான் 30 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்ததுள்ளார்.
நீதிவான் உத்தரவின் பேரில் பிள்ளைகள் மூன்று பேரையும் சிரிய தாய் வீட்டில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என இன்று நீதிவான் பணித்து உள்ளதாகவும்.
இச் சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார கூறுகையில்,
சம்பந்தப்பட்ட யுவதியின் தாய் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்று உள்ளார் எனவும் அத் தாய்க்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் மூன்று பேரும் பெண்கள் எனவும் 9 வயது 11வயது 20 வயது உடையவர்கள் என கூறினார்.
இவ்வாறு மலையக பகுதிகளில் பெண் பிள்ளைகளை தந்தையின் பாதுகாப்பில் விட்டு செல்வதால் இவ்வாறு பல குற்ற செயல்கள் இடம் பெற்று வருகிறது. ஆகையால் மலையக பகுதிகளில் இனியும் வெளிநாட்டு வேலைக்கு பெண்கள் போவதை நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
https://youtu.be/aZBarAfFHtM