தொடரும் இஸ்ரேலிய குண்டுவீச்சு… நூற்றுக்கணக்கான புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சை மறுப்பு
காசா பகுதியில் பாலஸ்தீன போராளிகளுக்கு எதிராக இஸ்ரேலிய குண்டுவீச்சு தொடரும் நிலையில் நூற்றுக்கணக்கான புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சை மறுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் மற்றும் பாலஸ்தீன போராளிகளுக்கு இடையே இந்த வாரம் கடுமையான தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவமனைகளில் அத்தியாவசிய அறுவைசிகிச்சைகள் பல ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசா பகுதியில் தொடர்ந்து ராக்கெட் வீச்சு முன்னெடுக்கப்படுவதாக மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் பலர் சிக்கலை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காசா பகுதியில் பாலஸ்தீன மக்கள் 29 பேர்கள் கொல்லப்பட்டதுடன், 90 பேர்கள் வரையில் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் 6 சிறார்கள், மூன்று பெண்கள் மற்றும் 2 முதியவர்களும் கொல்லப்பட்டவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, இஸ்ரேல் தரப்பு இரு போக்குவரத்து வழிகளை மூடியுள்ளதால், சுமார் 292 நோயாளிகள் அவசர மருத்துவ உதவி பெற முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் புற்றுநோய் நோயாளிகள்.
15 நோயாளிகள் உடனடியாக உயிர் காக்கும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆனால் தற்போது அவர்கள் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
https://youtu.be/MPA-GsdX9II