மாமியாரை தாக்க ஆணாக மாறிய மருமகள்; வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஆண் வேடம் அணிந்து மாமியாரின் கால்களை அடித்து நொறுக்கிய மருமகளின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்துள்ளது பாலராமபுரம் என்ற பகுதியில் வசித்து வருபவர் வசந்தி. இவரது இரண்டாவது மகன் ரெதீஷ் குமாருக்கு சுகன்யா என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது.

ரெதீஷ்குமார் போதைக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. எப்போதுமே போதையில் வீட்டிற்கு வந்து சுகன்யாவை அடித்து துன்புறுத்துவாராம். இந்த குடிபழக்கத்துக்கு காரணமே அவரின் தாய் வசந்திதான் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தவறுகளையும் கண்டிக்காமல் தவறியதால் மாமியார் மீது சுகன்யாவுக்கு ஆத்திரம் அதனால் மாமியாரை தாக்க சுகன்யா திட்டமிட்டுள்ளார். அதன்படி ரெதீஷ்குமாரின் ஷர்ட், பேண்ட், ஷூ, அணிந்து கொண்டு, அடையாளம் தெரியாதவாறு முகத்தில் முகமூடியையும் அணிந்து கொண்டு, மாமியாரான வசந்தியை மருமகள் சுகன்யா தாக்கியுள்ளார்.

மாமியாரை, தாக்க ஆணாக, மாறிய மருமகள், வெளியான ,அதிர்ச்சித் தகவல்

இச் சம்பவத்தன்று, காலை 6 மணியளவில், பால் வாங்கி வருவதற்காக, பக்கத்தில் இருக்கும் பால் பூத்துக்கு சென்று கொண்டிருந்தார் வசந்தி. அப்போது ஆண் வேடமிட்ட சுகன்யா திடீரென வசந்தியை வழிமறித்து தடுத்து நிறுத்தினார்.

இதனால் பதறிப்போன வசந்தி ஒருகணம் திகைத்து நின்றார். ஆனால், அதற்குள் சுகன்யா பெரிய இரும்பு கம்பியால் வசந்தியை சரமாரியாக தாக்கினார். வசந்தியின் காலிலும், தலையிலும் மிகக் கொடூரமாக தாக்கியதில் வசந்தியின் கால் அங்கேயே ஒடிந்துவிட்டது. வலி பொறுக்க முடியாமல் வசந்தியின் அலறி துடித்தார்.

அவரது சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் சுகன்யா அங்கிருந்து தப்பிவிட்டார். இதன்போது படுகாயமடைந்த வசந்தியை மீட்ட பொதுமக்கள் திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த விவகாரம் குறித்து திருவனந்தபுரம் பொலிசாருக்கு தகவல சொல்லப்படவும் அவர்கள் விரைந்து வந்து, வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.

வசந்தியை தாக்கியது யார் என தெரியவில்லை என்பதால் அந்த பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை பொலிசார் ஆய்வு செய்தனர்.

அதன்பின்னர் கணவரின் சட்டையை அணிந்து மருமகள் சுகன்யா இப்படி ஒரு காரியத்தை செய்திருப்பதை பொலிசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து சுகன்யாவை பொலிசார் கைது செய்தனர்.ஆண் வேடம் அணிந்து மாமியாரின் கால்களை அடித்து நொறுக்கிய மருமகள் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://youtu.be/_6bOakhOwsE

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button