நண்பரின் சடலத்தை ஃப்ரீசரில் பாதுகாத்து அவரது வங்கிக் கணக்கை பயன்படுத்திய நபர்
பிரிட்டனில் முதியவர் ஒருவரின் சடலத்தை 2 ஆண்டுகளாக ஃப்ரீசரில் பாதுகாத்து அவரது வங்கிக் கணக்கை பயன்படுத்தி பணத்தை செலவு செய்துள்ளார் அவருடன் தங்கியிருந்த நபர்.
கடந்த 2018 செப்டம்பர் மாதம் 71 வயதான ஜான் வைன்ரைட் மரணமடைந்துள்ளார். ஆனால் ஃப்ரீசரில் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்த அவரது சடலமானது 2020 ஆகஸ்டு மாதம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவருடன் தங்கியிருந்ததாக கூறப்படும் 52 வயதான டேமியன் ஜான்சன் என்பவர் கைதானதுடன், செவ்வாயன்று வைன்ரைட்டின் சட்டப்பூர்வ மற்றும் கண்ணியமாக அடக்கம் செய்வதைத் தடுத்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
ஆனால் பண மோசடி குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், வைன்ரைட்டின் வங்கிக் கணக்கு என்பது உண்மையில் தன்னுடையது என வாதிட்டுள்ளார். தொடர்புடைய இரு நபர்களும் ஒன்றாகவே குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.
இந்த நிலையில் வைன்ரைட் மரணமடைய, அவரது வங்கி அட்டையை பயன்படுத்தி ஜான்சன் பொருட்கள் வாங்குவதுடன், தமது சொந்த கணக்குக்கு அதில் இருந்து பணமும் அனுப்பியுள்ளார். வைன்ரைட் எவ்வாறு இறந்தார், அல்லது மரண காரணம் குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை.