நடிகை வனிதா விஜயகுமாரின் 3வது கணவர் பீட்டர் பால் மரணம்..!

நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது கணவர் பீட்டர் பால் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சை திருமணம்

பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா, இவர் 2000 ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார், பிறகு 2007 ஆம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

தொடர்ந்து ஆனந்த் ஜெயராஜன் என்பவரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். 2012 ஆம் ஆண்டு அவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்றார்.

பின்னர் பிக் பாஸ் பிரபலமான ராபர்ட் மாஸ்டரை சில காலம் காதலித்து வந்தார், பின் அவரையும் பிரேக்அப் செய்து, தனியாக மகள்களுடன் வாழ்ந்து வந்த போது தான் பீட்டர் பாலை சந்தித்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

நடிகை வனிதா, விஜயகுமாரின், 3வது கணவர் ,பீட்டர் பால் மரணம்

கடந்த 2020 ஆம் ஆண்டு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது.

பீட்டர் பால் உயிரிழப்பு

தொடர்ந்து, இதனை அறிந்த பீட்டரின் மனைவி எலிசபெத் தன்னை முறையாக விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக போலீசிடம் புகாரளித்தார்.

அந்த சமயத்தில் இது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது. மேலும், பீட்டரும், வனிதாவும் சில நாட்கள் ஒன்றாக வாழ்ந்தனர்.

நடிகை வனிதா, விஜயகுமாரின், 3வது கணவர் ,பீட்டர் பால் மரணம்

வனிதாவின் யூடியூப் சேனல்க்கு உதவி செய்தபோது இவர்கள் இணைந்தனர். பிறகு இவரது அதிகமாக குடிப்பழக்கம் மற்றும் பொய் கூறுவதாக இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

தற்போது வனிதா அவரது மகள்களுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், பீட்டர் பால் தனது குடிப்பழக்கத்தால், உடல்நலக் குறைவின் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவரது இறப்புக்கு வனிதா நேரில் சென்று அஞ்சலி செலுத்துவாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.

https://youtu.be/5UZMFr0rbtQ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button