பிரான்ஸில் திருமண நிகழ்வொன்றில் ஏற்பட்ட பரபரப்பு – மணப்பெணுக்கு நேர்ந்த கதி
பிரான்ஸில் திருமண நிகழ்வொன்றின் போது விருந்தினர் ஒருவர் மணப்பெண்ணை கண்ணாடிப்போத்தல் ஒன்றினால் தாக்கியமையினால் திருமணம் தடைப்பட்டுள்ளது.
இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இங்கு இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றுக்கு நிறைந்த மதுபோதையில் விருந்தினர் ஒருவர் வருகை தந்துள்ளார். அவர் திருமணத்தை நிறுத்தும் முகமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அங்கு ஜொந்தாமினர் அழைக்கப்பட்டனர். பின்னர் அவரை சமாதானப்படுத்திவிட்டு அங்கிருந்து ஜொந்தாமினர் சென்றனர்.
ஆனால் நிலமை அதன் பின்னரே மோசமடைந்தது. குறித்த நபர் உடைந்த கண்ணாடிப்போத்தல் ஒன்றின் மூலம் மணப்பெண்ணை தாக்கியுள்ளார். கழுத்தில் வெட்டப்பட்ட குறித்த பெண் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
இச்சம்பவத்தினால் திருமண நிகழ்வில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மணப்பெண் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். தாக்குதல் நடத்திய நபரை ஜொந்தாமினர் கைது செய்தனர்.
https://youtu.be/k0ccSxvBW3w