வெளிநாடொன்றில் ஓடும் ரயிலில் பாரிய தீ விபத்து: 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் நாட்டில் ஓடும் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிநாடொன்றில், ஓடும் ரயிலில் ,பாரிய தீ விபத்து, 3 குழந்தைகள், உட்பட 7 பேர் உயிரிழப்பு

சம்பம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கராச்சியில் இருந்து லாகூர் நோக்கி கராச்சி எக்ஸ்பிரஸ் என்ற ரயில் சென்று கொண்டிருந்தது.

நேற்று முன்தினம் இரவு இந்த ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. இதனால் அந்த பெட்டியில் இருந்த பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். எனவே அந்த ரெயில் தண்டோ மஸ்தி கான் என்ற ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது.

வெளிநாடொன்றில், ஓடும் ரயிலில் ,பாரிய தீ விபத்து, 3 குழந்தைகள், உட்பட 7 பேர் உயிரிழப்பு

இந்த சம்பவம் தொடர்பில் தீயணைப்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ரயிலின் அந்த பெட்டி மீது தண்ணீரை அடித்தனர். தியணைப்பு வீரர்களின் கடுமையான போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதேவேளை ரயிலுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டனர். ஆனால் நள்ளிரவு நேரம் என்பதால் பலர் ரயிலில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். இதனால் மீட்பு பணியில் சற்று சிரமம் ஏற்பட்டது.

மேலும் இந்த விபத்தில் ரயிலில் இருந்த 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் அவர்களை மீட்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button