பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையால் பிரபல மாடல் அழகி மரணம் – அதிர்ச்சி சம்பவம்

பிரபல மாடல் அழகி மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல மாடல் அழகி மரணம்

கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா ஆஷ்டேன் கூர்கானி. கிம் கர்தாஷியன் தோற்றம் கொண்ட இவர் பிரபல மாடல் அழகியாக வலம் வந்தார். 34 வயதாகும் இவருக்கு இன்ஸ்டா பக்கத்தில் 618Kக்கும் அதிகமான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்தனர்.

பிரபல மாடல் அழகி மரணம்

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் கலிபோர்னியா மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மருத்துவ சிகிச்சை பலனின்றி கிறிஸ்டினா உயிரிழந்தார்.

இவருடைய இறுதிச் சடங்கு கூர்கனியில் நடைபெற உள்ளது. இதனால், அவரது குடும்பத்தினர் பணம் திரட்டுவதற்காக GoFundMe பக்கத்தை உருவாக்கியுள்ளனர்.

இது குறித்து கிறிஸ்டினாவின் குடும்பத்தினர் சமூகவலைத்தளங்களில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘எங்கள் அழகான, அன்பு மகளும் சகோதரியுமான கிறிஸ்டினா ஆஷ்டேன் கூர்கானியின் துரதிர்ஷ்டவசமான மறைவை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.

மிகுந்த ஆழ்ந்த சோகத்துடனும், மிகுந்த கனத்துடனும், உடைந்த இதயத்துடனும் இருக்கிறது என்று பதிவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக பொலிசார் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button