டென்ஷன் ஆகாதீங்க பாஸ்.. சுவரில் லெட்டர் எழுதி வைத்து காரை திருடிய பலே திருடன்!

டென்ஷன் ஆகாதீங்க பாஸ்.. சுவரில் லெட்டர் எழுதி வைத்து காரை திருடிய பலே திருடன்!  கார் திருடப்படும் சம்பவங்கள் அதன் உரிமையாளருக்கு தலைவலியை ஏற்படுத்தி விடும்.

எனினும், சமீபத்தில் காரை திருடிய நபர், அதன் உரிமையாளருக்கு அசத்தலாக தகவல் ஒன்றை சுவற்றில் எழுதி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மார்ச் 20, 2023 ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட மாருதி பிரெஸ்ஸா ZXi மாடலை நபர் திருடியுள்ளார்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”yes” number=”4″ style=”grid” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

அப்துல் அசிஸ் என்ற நபரின் காரை திருடிய மர்ம நபர், கார் நிறுத்தப்பட்டு இருந்த வீட்டின் சுவரில் ஆறுதல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “உங்களது கார் மூன்று நாட்களில் திரும்ப கிடைத்துவிடும்.

வீணாக அழ வேண்டாம். காவல் துறையில் புகார் அளித்தால், கார் திரும்ப கிடைக்காது. இதனை வேறு யாரிடமும் கூற வேண்டாம். டென்ஷன் ஆகாதீர்கள்,” என்று எழுதியுள்ளார்.

எனினும், இந்த சம்பவம் குறித்து காரின் உரிமையாளர் காவல் துறையில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சுவரில் அந்த வாசகத்தை எழுதியது யார் என்பதை கண்டறிய தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் மாதிரிகளை ஆய்வு செய்துள்ளனர்.

கார் திருடப்பட்ட சம்பவம் அசாம் மாநிலத்தின் தாராங் மாவட்டத்தில் ஏப்ரல் 25 ஆம் தேதி அதிகாலை அரங்கேறி இருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button