கின்னஸ் சாதனைக்காக லிப்ஸ்க்கு பல இலட்சம் செலவு செய்த பெண்!
கின்னஸ் சாதனைக்காக தன்னுடைய லிப்ஸ் தான் உலகில் மிகப்பெரியதாக இருக்க வேண்டும் என எண்ணற்ற தடுப்பூசிகளை பயன்படுத்திய பெண்ணின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வித்தியாசமாக காட்டுதல்
பொதுவாக நாம் மற்றவர்களிடமிருந்து நம்மை எப்படி வேறுப்படுத்தி காட்ட வேண்டும் என அதிக ஆர்வமாக இருப்போம்.
ஆனால் இதற்காக தலைமுடி வெட்டிதல், அழகு சேர்த்தல், வித்தியாசமாக மேக்கப் போட்டு கொள்ளுதல், என வெளியில் இருக்கும் அழகை மட்டும் தான் வேறுப்படுத்தி காட்டுவோம்.
மாறாக வெளிநாடுகளில் இருக்கும் பெண்கள் தங்களின் உருவ அமைப்பிலும் மாற்றங்களை செய்து கொள்கிறார்கள்.
இதனால் அவர்களின் அடையாளம் கூட மாறி போகும் வாய்ப்பும் இருக்கிறது.
உலகத்தில் மிக பெரிய லிப்ஸ்
அந்தவகையில் நைஜீரியாவை சேர்ந்த 25 வயது பெண்ணொருவர் தன்னுடைய லிப்ஸை உலகில் பெரிய லிப்ஸ் கொண்ட பெண் என கின்னஸ் சாதனை செய்ய வேண்டும் எனக் கூறி கொண்டு, சுமார் 7 இலட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து இவர் இந்த சிகிச்சையை சுமார் 32 தடவைகள் செய்திருக்கிறாராம். மேலும் 15 மேற்ப்பட்ட தடுப்பூசிகளை இவரின் லிப்ஸில் செலுத்தியும் இருக்கிறாராம்.
இந்த செய்தி புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த இணையவாசிகள் “என்னடா இது! லிப்ஸா அல்லது டயரா? ”என கேலி செய்து வருகிறார்கள்.