சயனைட் மூலம் 9 பேரை கொலை செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது!

9 பேரை, சயனைட் கொடுத்து கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பெண்ணொருவரை தாய்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகி்ன்றது.

குறித்த பெண் பாங்காக்கில் வைத்து நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று (26) தெரிவித்துள்ளனர்.

சயனைட் ,மூலம் 9 பேரை, கொலை செய்த ,குற்றச்சாட்டில், பெண் .ஒருவர் கைது

பல ஆண்டுகளாக நடந்த கொலைகள்

பல ஆண்டுகளாக நடந்த இந்த கொலைகள் தொடர்பாக 30 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

பணமே இக்கொலைகளுக்கான காரணமாக இருக்கலாம் என தாய்லாந்து பொலிஸ் பேச்சாளர் அர்சயொன் க்ரெய்தோங் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட 10 ஆவது நபரொருவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார் என தாய்லாந்து தேசிய பொலிஸ் பிரதித் தலைவர் சுராசெட் ஹக்பார்ன் கூறியுள்ளார்.

தீவிர விசாரணை

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான பெண் அந்நாட்டு மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் மனைவி என சுராசெட் கூறியுள்ளார்.

குறித்த பெண் ரட்சாபுரி மாகாணத்தில் இரு வாரங்களுக்கு முன்னர் தனது நண்பி ஒருவரை கொலை செய்தார் என பொலிஸார் முதலில் சந்தேகித்தனர்.

பின்னர் சந்தேக நபரை விசாரித்த பின்னர், கஞ்சனாபுரி மற்றும் நகோன் பதோம் மாகாணங்களில் நடந்த ஏனைய சயனைட் மரணங்களுடன் இப்பெண்ணை பொலிஸார் தொடர்புபடுத்தியுள்ளனர்.

https://youtu.be/ruSR2WOOv7U

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button