யாழில் நடிகர் திலகம் சிவாஜி வைத்த மரம்; உருகி நின்ற மகன் ராம் குமார்!

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த புதல்வர் ராம் குமார் மூளாய் கிராமத்திற்கு நேற்று( 24) வருகை தந்த நிலையில், தந்தை வைத்த மாமரத்தை பார்த்து உருகி நின்ற சம்பவம் பலரையும் நெர்கிழ வைத்துள்ளது.

தந்தை ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் நிதி சேகரித்துத் தந்ததால் உருவான மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலினால் ராம் குமார் அங்கு வருகை தந்திருந்தார்.

யாழில் நடிகர் ,திலகம் சிவாஜி ,வைத்த மரம், உருகி நின்ற, மகன் ராம் குமார்

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை
இன்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முன்னர் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக சிவாஜி கணேசன் 1953ம் ஆண்டு ஒக்டோபர் 28ந் தேதி யாழ்ப்பாணம் நகரசபை மண்டபத்தில் “என் தங்கை” என்ற நாடகத்தை நடத்தி நிதிசேகரித்துக் கொடுத்திருந்தார்.

யாழில் நடிகர் ,திலகம் சிவாஜி ,வைத்த மரம், உருகி நின்ற, மகன் ராம் குமார்

அதே நாடகம் கொழும்பிலும் நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் சிவாஜி ஒரு இளம் நடிகர். சிவாஜியின் முதல் படமான ‘பராசக்தி ‘ 1952 ஒக்டோபரில் வெளியானது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து முனைவர் மருதுமோகன் எழுதிய புத்தகத்தின் யாழ்ப்பாண வெளியீட்டுக்காக இங்கிலாந்தில் வசிக்கும் ஈழத்தமிழரான முனைவர் சிவா பிள்ளையின் அழைப்பின்பேரில் ‘சென்னை-யாழ்ப்பாணம்’ பயணிகள் விமானத்தில் பலாலிக்குப் பறந்து வந்த ராம் குமார், யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டார்.

யாழில் நடிகர் ,திலகம் சிவாஜி ,வைத்த மரம், உருகி நின்ற, மகன் ராம் குமார்

அதன் பின்னர் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கும் அவர் சென்றார். வைத்தியசாலையின் நிர்வாகிகள், வைத்தியர்கள், தாதிமார் இணைந்து அவரை, வரவேற்றிருந்தனர்.

யாழில் நடிகர் ,திலகம் சிவாஜி ,வைத்த மரம், உருகி நின்ற, மகன் ராம் குமார்

அந்த அன்பான உபசரிப்புக் கண்டு மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறார் ‘சிவாஜியின் செல்வன்’. தனது தந்தையின் கையால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் நட்டு வைக்கப்பட்டிருந்த மாமரத்தை கண்டபோது கடுமையாக உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார் ராம்குமார்.

யாழில் நடிகர் ,திலகம் சிவாஜி ,வைத்த மரம், உருகி நின்ற, மகன் ராம் குமார்

நல்லூர் கந்தன் உள்ளிட்ட பல ஆலயங்களில் தரிசனம்
யாழ்ப்பாணத்தின் ஒரு சில பகுதிகளையும் சுற்றிப் பார்த்த ராம் குமார். நல்லூர் கந்தசாமி கோவிலுள் கண்கள் குளமாகி அழுதேவிட்டாராம். அத்துடன் தொல்புரம் மன்னதோட்டம் ஜெகஜோதி அம்பாள் ஆலயம், பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயம், கீரிமலை, செல்வச்சந்நதி, மாவிட்டபுரம், வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலயத்திற்கும் சென்று வழிபாட்டார்.

யாழில் நடிகர் ,திலகம் சிவாஜி ,வைத்த மரம், உருகி நின்ற, மகன் ராம் குமார்

அதோடு , யாழ் கோட்டை, இந்தியா அன்பளித்த கலாச்சார மண்டபம், யாழ் நூல்நிலையம்,பருத்தித்துறை முனை, சங்கிலியன்தோப்பு, மந்திரிமனை என பட்டியல் நீள்கிறது. யாழ்ப்பாண தேசமும் தெய்வீகமும் சிவாஜி மகன் ராம்குமாரை கவர்ந்துவிட்டிருக்கிறது.

யாழில் நடிகர் ,திலகம் சிவாஜி ,வைத்த மரம், உருகி நின்ற, மகன் ராம் குமார்

யாழில் நடிகர் ,திலகம் சிவாஜி ,வைத்த மரம், உருகி நின்ற, மகன் ராம் குமார்

https://youtu.be/BiXsN8TeBe4

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button