ஒரே ஆண்டில் சுமார் எழுநூறு தாதிகள் நாட்டை விட்டு வெளியேற்றம்
சுகாதார திணைக்களத்தின் அறிக்கைகளின்படி ஜனவரி 2022 மற்றும் ஜனவரி 2023 க்கு இடையில் சுமார் எழுநூறு தாதிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இவர்களில் ஐந்நூற்று ஐம்பது தாதியர்கள் சுகாதார அமைச்சின் அங்கீகாரத்துடன் விடுமுறை எடுத்து ஐந்து வருட காலத்திற்கு மேலதிக கல்விக்காக வெளிநாடு சென்றுள்ளனர் சுமார் நூற்றைம்பது தாதியர்கள் எவ்வித அறிவித்தலுமின்றி வெளிநாடு சென்றுள்ளனர்.
தாதியர் சேவையில் தற்போது சுமார் இரண்டாயிரத்து நானூறு வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் இந்த வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் (தாதியர் கட்டுப்பாடு) சாமிக்க கமகே தெரிவித்துள்ளார்.
https://youtu.be/FCbzn461cmk