யாழ்.நல்லுார் பகுதியில் போதை ஊசிகளுடன் மூவர் கைது!

யாழ்.நல்லுார் – அரசடி பகுதியில் போதை ஊசிகளுடன் 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து போதை ஊசிகள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் , கைதான மூவரும் நகர் பகுதியில் பழக்கடைகளில் பழ விற்பனையில் ஈடுபடும் நபர்கள் என தெரியவந்துள்ளது.

அவர்கள் மூவரும் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

https://www.youtube.com/watch?v=IX7rNe0OYRY

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button