ஒய்வுதியம் பெறுவதற்கு வெறுங்காலுடன் பல கிலோ மீட்டர் நடந்த மூதாட்டி – நிர்மலா சீதாராமன் கண்டன ட்விட்
வங்கியில் பணத்தை எடுப்பதற்காக வெறுங்காலுடன் பல கிலோ மீட்டர் நடந்த மூதாட்டியின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஒடிசா மாநிலம், நப்ராங்பூர் மாவட்டத்தில் உள்ள ஜாரிகான் தொகுதியைச் சேர்ந்தவர் சூர்யா ஹரிஜன் (70).கடந்த 17ம் திகதி வயதான சூர்யா மூதாட்டி தன்னுடைய ஓய்வூதியத்தை பெறுவதற்காக உடைந்த நாற்காலி உதவியுடன், பல கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் வங்கிக்கு சென்றுள்ளார். வங்கியில் மூதாட்டி சென்றவுடன், அவரது கைரேகை பொருந்தவில்லை என்று கூறி வங்கி ஊழியர்கள் அவரை திருப்பி அனுப்பியுள்ளனர்.
கையில் நாற்காலியுடன் வெறுங்காலுடன் திரும்பி நடந்து வந்த மூதாட்டியை வழியில் யாரோ ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார். இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலானது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் கண்டனங்களை தெரிவித்து கமெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், மூதாட்டியின் அவலநிலைக்காக பாரத ஸ்டேட் வங்கியை (எஸ்பிஐ) இழுத்துள்ளார்.
அந்த பதிவில்,“ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) மேலாளர் பதிலளிப்பதைப் பார்க்க முடியும். ஆனால் நிதிச் சேவைத் துறை (டிஎஃப்எஸ்) மற்றும் எஸ்பிஐ இதை அறிந்து மனிதாபிமானத்துடன் செயல்பட விரும்புகிறேன். அவர்கள் வங்கி இல்லை மித்ரா? என்று பதிவிட்டுள்ளார்.இதற்கு ட்விட் செய்த SBI மேலாளர் ஜாரிகான் கிளை கூறுகையில், மூதாட்டியின் விரல்கள் உடைந்துள்ளன. அதனால் மூதாட்டியால் பணம் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதை விரைவில் சரிசெய்து விடுவோம் என்றார்.