30 ஆண்டுகளாக கழிவறையில் இயங்கி வந்த உணவகம்! அதிர்ச்சி சம்பவம்

சவுதியில் ஜெட்டா நகரில் உள்ள உணவகம் ஒன்று கடந்த 30 ஆண்டுகளாக கழிவறையில் இயங்கி வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நகராட்சி அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து அந்த உணவகத்திற்கு சென்று சோதனையிட்டதில், அவர்களுக்கு பலத்த அதிர்ச்சி காத்திருந்தது.

30 ஆண்டுகளாக, கழிவறையில், இயங்கி ,வந்த உணவகம்,அதிர்ச்சி ,சம்பவம்
30 ஆண்டுகள் பாரம்பரியமிக்க குறித்த உணவகத்தில் சமோசா உள்ளிட்ட பிற பலகாரங்கள் கழிவறையில் வைத்து தயாரிக்கப்பட்டு வந்துள்ளன. கழிவறையிலேயே மதிய உணவு உள்ளிட்ட பிற உணவுகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர காலாவதியான இறைச்சி மற்றும் பாலாடை கட்டி ஆகியவையும் அந்த உணவகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

அவற்றில் சில 2 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகி இருந்தன. பூச்சிகளும், எலிகளும் உணவகத்தில் ஓடி, ஆடியபடி இருந்தன.

30 ஆண்டுகளாக, கழிவறையில், இயங்கி ,வந்த உணவகம்,அதிர்ச்சி ,சம்பவம்
30 ஆண்டு பழமையான உணவகத்தின் பணியாளர்களுக்கு சுகாதார அட்டைகள் எதுவும் இல்லை. சட்ட விதிகளை மீறியுள்ளது தெளிவாக அதிகாரிகளுக்கு தெரிந்துள்ளது.

இதனை தொடர்ந்து அந்த உணவகம் பூட்டப்பட்டு உள்ளது. சுகாதாரமற்ற முறையில் உள்ள உணவகம் சவுதி அரேபியாவில் மூடப்படுவது என்பது இது முதல் முறையல்ல என கூறப்படுகின்றது.

கடந்த ஜனவரியில் ஜெட்டா நகரில் ஷாவார்மா உணவு விடுதியில் எலி ஒன்று அலைந்து கொண்டு அங்கிருந்த இறைச்சியை சாப்பிட்டு கொண்டும் இருந்தது.

பிரபல உணவு விடுதியில் எடுக்கப்பட்ட அதிர்ச்சி தரும் அந்த வீடியோவை பார்த்த பலரும் சமூக வலைதளத்தில் கொந்தளித்தனர்.

உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை வலியுறுத்தினர்.

இதனையடுத்து அந்த உணவகத்திற்கு சீல் வைத்து அதிகாரிகள் மூடினர்.

இதன் எதிரொலியாக பல இடங்களில் 2,833 ஆய்வு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு 26 உணவகங்கள் மூடப்பட்டன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button