யாணை தந்தங்களை விற்க முயன்ற விஹாராதிபதி கைது!
பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கிய யானைத் தந்தங்களை 50 இலட்சம் ரூபாவுக்கு கடத்தல்காரர்கள் ஊடாக விற்பனை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விஹாரை ஒன்றின் விஹாராதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை பிரதேசத்தில் நபர் ஒருவர் பாரிய தந்தம் ஒன்றை விற்பனை செய்ய முயற்சிப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சோதனைகளை மேற்கொண்ட பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினர் நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்படி விஹாராதிபதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.