கழிப்பறைகளால் ஏற்பட்ட சிக்கல் – புறப்பட்ட இடத்துக்குத் திரும்பிய ஆஸ்திரேலிய விமானம்
ஆஸ்திரேவியாவில் உள்ள வியென்னாவில் இருந்து நியூயோர்க் சென்ற விமானம் ஒன்று 2 மணி நேரத்தில் புறப்பட்ட இடத்துக்கே திரும்பியது.
விமானத்தினுள் இருந்த 8 கழிப்பறைகளில் 5 அடைத்துக்கொண்டதே அதற்குக் காரணமாகும்.
திங்கட்கிழமை 300 பேரை ஏற்றியிருந்த அந்த Boeing 777 ரக விமானம், 8 மணி நேரம் பயணம் செய்திருக்கவேண்டியது.
ஆனால் கழிப்பறைகளில் ஏற்பட்ட சில கோளாறுகளால் விமானத்தை வந்த இடத்துக்குத் திருப்பிவிட முடிவெடுக்கப்படுக்கப்பட்டுள்ளது.
விமான நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்தார்.
ஆஸ்திரிய விமானங்களில் இதுவரை இதுபோன்ற பிரச்சினைகள் இருந்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோளாறுகள் சரிசெய்யப்பட்டு, விமானம் சேவைக்குத் திரும்பியுள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகள் மற்ற விமானச் சேவைகளின் மூலம் பயணத்தைத் தொடர்ந்தனர்.