உலகின் ஆகக் குட்டையான நாய்; வெறும் 12.7 செண்டிமீட்டர் தான் உயரம்
அமெரிக்காவைச் சேர்ந்த 2 வயதுப் பெண் சீஹுவாவா உலகின் ஆகக் குட்டையான நாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெர்ல் எனும் அது, 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் திகதி பிறந்தது. பெர்லின் உயரம் வெறும் 12.7 செண்டிமீட்டர், அதன் எடை 533 கிராம்.
இதற்கு முன்பு உலகின் ஆகக் குட்டையான நாய் என்ற பெயரைப் பெற்ற மிரெக்கல் மில்லி பெர்லின் உறவினர் தான். பெர்ல் பிறக்கும் முன்பு மில்லி இறந்துவிட்டது.
அண்மையில் இத்தாலியின் மிலான் நகரில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெர்ல் அறிமுகம் செய்யப்பட்டது.
பெர்ல் தமது செல்லப்பிராணியாக இருப்பது தன்னுடைய அதிர்ஷ்டம் என்கிறார் அதன் உரிமையாளர் வனெசா செம்லர்
பெர்லுக்குக் கோழி, சல்மன் மீன் வகை சாப்பிட பிடிக்கும் என்றும், அழகான ஆடைகள் அணிவதும் அதற்குப் பிடிக்கும் என தெரிவித்த வனெசா, பெர்லுடன் சேர்ந்து பல இன்பமான நிகழ்வுகளைக் கழித்துள்ளதாகக் கூறினார் .