புத்தாண்டுக்கு உறவினர் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தவர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
இன்று (14) புத்தாண்டை முன்னிட்டு உறவினர் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த குழுவினரை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி திடீரென தீப்பற்றி எரிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து நாசம்
இதன்போது தீயினால் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
ராகம பிரதேசத்தில் வசிக்கும் குழுவினர் அகலவத்தை பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படும் நிலையில் விபத்துகான காரண்ம் குறித்து பொலிஸார் ஆராய்து வருகின்றனர்.