ஆண்களை விட பெண்களுக்கு அதிக தூக்கம் தேவையா? அறிந்திருக்க வேண்டியவை

ஒவ்வொரு நபருக்கும் வயதுக்கு ஏற்ப தூங்கும் நேரம் மாறுபடுகிறது. இருப்பினும் பெரியவர்களுக்கு 7 முதல் 9 மணி நேர தூக்கம் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆனால் இதற்கும் பாலினத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

ஆண்களை, பெண்களுக்கு, அதிக தூக்கம், அறிந்திருக்க வேண்டியவை

அமெரிக்காவின் நெஷனல் லைப்ரரி ஒப் மெடிசின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, ஆண்களை விட பெண்கள் 11 நிமிடம் கூடுதலாக தூங்குகிறார்கள். அதன் பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன? தூக்கமின்மை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், நல்ல தூக்கத்தைப் பெறுவதற்கான வழிகள் என்ன? என்பது பற்றி பார்ப்போம்.

அந்த ஆய்வின் படி, ஆண்களை விட பெண்களுக்கு அதிக தூக்கம் தேவை. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆண்களை விட பெண்களுக்கு தூக்கமின்மை பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 40 சதவீதம் அதிகம்.

ஆண்களை, பெண்களுக்கு, அதிக தூக்கம், அறிந்திருக்க வேண்டியவை

மேலும் பெண்களுக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். கர்ப்ப காலத்தில், கால் வீக்கம் சார்ந்த பிரச்சினையை அனுபவிக்கிறார்கள். இதுவும் சில நிமிடங்கள் கூடுதலாக தூங்குவதற்கு வழிவகுக்கிறது.

பெண்கள் வாழ்நாள் முழுவதும், ஹோர்மோன் மாற்றங்களை எதிர்கொள்கிறார்கள். மாதவிடாயின் போது ஏற்படும் பிடிப்புகள், வீக்கம், சோர்வு போன்றவை தூக்கத்தையும் பாதிக்கின்றன.

ஆண்களை, பெண்களுக்கு, அதிக தூக்கம், அறிந்திருக்க வேண்டியவை

கர்ப்ப காலத்தில், ஹோர்மோன் மாற்றங்கள் கடுமையாக நிகழும். அடிக்கடி சிறுநீர் கழித்தல், கால் வீக்கம், வலிகள் ஆகியவை பொதுவானவை. இவையும் தூக்கத்தை பாதிக்கும்.

இதேபோல் மாதவிடாய் காலத்தில் பகலில் உடல் சூடு, இரவில் வியர்வை வழிதல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். இதுவும் தூக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

ஆண்களை, பெண்களுக்கு, அதிக தூக்கம், அறிந்திருக்க வேண்டியவை

ஒருவருக்கு எவ்வளவு தூக்கம் தேவை என்பது அவரது வயதைப் பொறுத்தது. புதிதாகப் பிறந்த குழந்தை ஒரு நாளைக்கு 14 மணி நேரத்திற்கும் மேலாக தூங்கும். ஆனால் வயது அதிகரிக்கும்போது தூங்கும் கால அளவு படிப்படியாக குறையும். பொதுவாக குழந்தைகள் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக தூங்குகிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button