அமெரிக்காவில் 18 ஆயிரம் மாடுகள் தீயில் கருகி பரிதாப உயிரிழப்பு!

அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் பகுதியில் உள்ள சவுத்போர்க் எனப்படும் மிகப்பெரிய பண்ணையில் திடீரென ஏற்பட்ட தீயில் 18 ஆயிரம் மாடுகள் பரிதாப உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பண்ணையில் பரவிய தீ சிறிது நேரத்தில் மளமளவென பண்ணை முழுவதும் பரவி பெரிய வெடி விபத்தாக மாறியதனால் பயங்கர சத்தம் கேட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான மாடுகள் பலி

இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்து கொண்டது. இதில் பால் கறப்பதற்காக பண்ணையில் ஒன்றாக கட்டி வைக்கப்பட்டிருந்த ஏராளமான மாடுகள் தீயில் சிக்கி எரிந்து கருகியன.

பால்பண்ணையில் ஏற்பட்ட இந்த விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அமெரிக்காவில் ,18 ஆயிரம் மாடுகள், தீயில் கருகி ,பரிதாப உயிரிழப்பு

ஆனால் அதற்குள் பண்ணையில் இருந்த ஆயிரக்கணக்கான மாடுகள் இறந்து கிடந்தன. அவற்றை கணக்கிட்ட போது மொத்தம் 18 ஆயிரம் மாடுகள் இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் இந்த விபத்தில் இருந்து மீட்கப்பட்ட ஒரு தொழிலாளி ஆபத்தான நிலையில் தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மின்சாதனங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து டெக்சாஸ் தீயைணைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேவேளை வாஷிங்டனை மையமாக கொண்டு விலங்குகள் நல வாரியம் 2013-ம் ஆண்டு கொட்டகை மற்றும் பண்ணையில் ஏற்படும் தீ விபத்தை கண்காணிக்க தொடங்கிய பின்னர், அமெரிக்காவில் அதிக கால்நடை உயிரிழந்தமை இந்த விபத்துதான் என கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button