ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் எரிமலை வெடிப்பு
ரஷ்யாவின் தொலைதூர கம்சட்கா தீபகற்பத்தில் செயலில் உள்ள எரிமலை ஒன்று புதன்கிழமை வெடிக்கத்தொடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
10-கிமீ உயரத்திற்கு எரிமலை சாம்பலை வெளியிடுவதாகவும், மேலும் இது விமான நிறுவனங்களுக்கு அபாய எச்சரிக்கையாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றான ஷிவேலுச், செவ்வாய் நள்ளிரவுக்குப் பிறகு முதலில் வெடிக்கத் தொடங்கியதாகவும், அதன் உச்சத்தில், ஆறு மணி நேரம் கழித்து, 108,000 சதுர கிமீ பரப்பளவில் சாம்பல் மேகத்தை அனுப்பியது எனவும் அந்நாட்டு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆரம்ப வெடிப்பின் சாம்பல் 20 கிமீ வரையில் சாம்பல் வானத்தை எட்டியது எனவும் , சாம்பல் எரிமலை தூசியின் சறுக்கல்களில் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள க்ளூச்சி கிராமம் பாதிக்கப்பட்டதுடன், விமான எச்சரிக்கையை தூண்டியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அறிவியல் அமைப்பின் புவி இயற்பியல் ஆய்வின் கம்சட்கா கிளையின் சமீபத்திய தரவுக்கு அமைய மொஸ்கோ நேரப்படி அதிகாலை 1 மணிக்கு வெளியிடப்பட்டது:
அத்துடன் இது குறித்த செயற்கைக்கோள் தரவுகளின்படி, சாம்பல் வெளியேற்றம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 10,000 மீட்டர் வரை வெளியாகியுள்ளது. எனினும் உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எரிமலை வெடிக்கத் தொடங்கிய 24 மணி நேரத்திற்குப் பிறகு, கம்சட்கா கடற்கரையில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ஏப்ரல் 3ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வு என ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.