கனடாவில் கோர தீ விபத்து;பல மில்லியன் டொலர் சேதம்
கனடாவின் வோகன் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் பாரியளவு சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் இரண்டு மில்லியன் டொலருக்கு மேற்பட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுமானம் செய்யப்பட்டு வந்த வீட்டுத் தொகுதியொன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வோகனின் டெஸ்டன் மற்றும் பேன் வெலி பகுதியில் சுமார் இருபது வீடுகள் இவ்வாறு தீ விபத்தில் சேதமாகியுள்ளன.
வெப்பநிலையுடன் கூடிய காலநிலை மற்றும் பலத்த காற்று காரணமாக இவ்வாறு வீடுகள் தீப்பற்றிக் கொண்டுள்ளன.
தீ விபத்து காரணமாக வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.