ஜெர்மனிக்கு அகதியாக சென்ற 11 வயது சிறுவனின் சாதனை!

சிரியாவில் இருந்து அகதியாக ஜெர்மனிக்கு சென்ற 11 வயது சிறுவன் ஜெர்மனியின் இளம் தேசிய செஸ் வீரராகியுள்ளார்.

ஹுசைன் பெசோவின் பெற்றோர் குடும்பத்துடன் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

இதன்போது பெசோ 4 வயதாக இருக்கும்போது அவரது தந்தை செஸ் விளையாட்டை கற்றுகொடுக்க தொடங்கினார்.

ஜெர்மனிக்கு ,அகதியாக சென்ற, சிறுவனின் ,சாதனை
6 வயதில் மாநில அளவிலாள கிளப் போட்டியில் விளையாட தொடங்கி வெற்றிகளை குவிக்க பெசோ ஆரம்பித்தார்.

2020-ல் ஜெர்மனியின் 10 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் முதல் இடத்தையும், கடந்த ஆண்டு 12 வயதுக்குட்பட்ட உலக சாம்பியன்ஷிப்பில் 3-வது இடத்தையும் பிடித்தார்.

இம்மாதம் இறுதியில் குரோஷியாவில் நடைபெறும் போட்டியில் ஜெர்மனிக்காக பெசோ விளையாட உள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button