உக்ரைனிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணையை சுட்டு வீழ்த்திய ரஷ்யா!
உக்ரைனிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை ரஷ்யா சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் ஏவுகணை ரிசார்ட் நகரமான ஃபியோடோசியா மீது சுட்டு வீழ்த்தப்பட்டதாக கிரிமியாவிற்கான ரஷ்ய தலைவர் தெரிவித்தள்ளார்.
இந்த ஏவுகணை தாக்குதலால் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரைனிடம் இருந்து கிரிமியா பகுதியை ரஷ்யா இணைத்துக்கொண்டது.
இந்த விவகாரம் சர்வதேச கண்டத்திற்கு உள்ளது.
இந்த நிலையில் தற்போது நடைபெற்று வருகின்ற போரில் இந்த பகுதியை மீட்கப்போவதாக உக்ரைன் சூளுரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.