ஹோட்டல் உரிமையாளர் கொலை; இருவர் கைது!
மிதிகமவில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் கொலை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹோட்டலுக்கு முன்பாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு உரிமையாளரை கொலை செய்வதற்கு உதவிய இரண்டு சந்தேக நபர்கள் விசேட அதிரடிப்படையின் தெற்கு விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரகசிய தகவலின்பேரில் கைது
சந்தேக நபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது கிடைத்த இரகசிய தகவலின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது அவர்களிடம் 13 கிராமுக்கு அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர் தொடம்கொடவைச் சேர்ந்த பெசிந்து சந்தருவன் (31) என தெரிவிக்கபப்டுகின்றது.