கனடிய எல்லைப் பகுதியில் படகு கவிழ்ந்து உயிரிழந்த குடும்பத்தின் திடுக் பின்னணி

ருமேனிய குடும்பத்தினர், கனடாவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயம் காரணமாகவே மிக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர் என தெரிவிக்கப்படுகிறது.

23 642d1c0e20e2e

கனடிய அமெரிக்க எல்லை பகுதியில் அண்மையில் படகு ஒன்று கவிழ்ந்து இரண்டு சிறார்கள் உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இளம் தந்தை ஒருவர் ருமானியாவிற்கு நாடு கடத்தப்படக்கூடிய நெருக்கடியை எதிர்நோக்கிய காரணத்தினால் அவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு செல்ல முயற்சித்துள்ளார்.

அமெரிக்க கனடிய எல்லைப் பகுதியில் காணப்படும் புனித லோரன்ஸ் நதி வழியாக இவர்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர் .

இதன் போது படகு கவிழ்ந்து குடும்பமே பரிதாபமாக உயிரிக்க நேரிட்டது.

ஏதிலி அந்தஸ்து கிடைக்காத காரணத்தினால் வேறு வழியின்றி இந்த குடும்பத்தினர் படகு மூலம் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு அமெரிக்கா நோக்கி பயணித்தனர் என குடியேற்ற சட்டத்தரணி பீட்டர் இவானி தெரிவிக்கின்றார்.

உயிரிழந்த குடும்பத்தினரை நாடு கடத்துவதற்காக கனடிய குடிவரவு ஏதிலிகள் நிறுவனம் விமான டிக்கெட்டுகளை கொல்வனவு செய்திருந்ததாக குறிப்பிடுகின்றார்.

வேறு எந்த வழியும் இன்றி இந்த ஏதிலிக் குடும்பம் அமெரிக்காவிற்கான ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு இடைநடுவில் துரதிஸ்டவசமாக உயிரிழந்ததாக சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டத்தரணி பீட்டர் இவானி இந்தக் குடும்பத்தினருக்கான சட்ட ஆலோசனை வழங்கி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button