கனடாவில் பறவை காய்ச்சல் நோயினால் செல்லப் பிராணி உயிரிழப்பு
கனடாவின் ஒஷோவா பகுதியில் நோய் காரணமாக செல்லப்பிராணி ஒன்று உயிரிழந்துள்ளது.
கனடாவின் பொது சுகாதார திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
காட்டுப் பறவை ஒன்றை கடித்த காரணத்தினால் நாயாயொன்றுக்கு பறவை காய்ச்சல் நோய் பரவியுள்ளது.
வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வந்த நாய் ஒன்று இவ்வாறு பறவை காய்ச்சல் நோய்க்கு உட்பட்டுள்ளது.
நோயினால் பாதிக்கப்பட்ட நாய் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கனடாவின் பிராம்டன் மற்றும் கெலிடன் ஆகிய பகுதிகளில் இரண்டு பறவைகளுக்கு பறவை காய்ச்சல் நோய் ஏற்பட்டு இருந்தமை கண்டறியப்பட்டிருந்தது.
எவ்வாறெனினும் பொது மக்களுக்கு பறவை காய்ச்சல் நோய் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் மிகக் குறைவாக காணப்படுவதாக சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.
கனடாவில் செல்லப்பிராணிகள் மூலம் பறவை காச்சல் நோய் மனிதனுக்கு பரவிய சந்தர்ப்பங்கள் பதிவாகியதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பறவை காய்ச்சல் நோய் தொடர்பில் தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.