அல்-அக்சா மசூதியில் பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலிய படையினருக்கும் இடையே மோதல்: அச்சத்தில் மக்கள்!
ஜெருசலேமிலுள்ள இஸ்லாமிய மத வழிப்பாட்டு தலமான அல் அக்சா மசூதியில் பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலிய படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
வழிபாட்டு தளத்தில் வன்முறை
இஸ்லாமிய மதத்தினரின் புனித மாதமான ரமலான் தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜெருசலேமில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான அல் அக்சா மசூதியில் நேற்று இரவு இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்தியுள்ளனர்.
அல் அக்சா வழிபாட்டு தலம் அமைந்துள்ள பகுதி அருகே யூதர்களின் புனித தலமான டெம்பிள் மவுண்ட் அமைந்துள்ளதால் அங்கு வழிபாடு நடத்த இஸ்ரேலியர்கள் இந்த வழியாக தான் செல்வார்கள் என தெரிகிறது.
அல் அக்சா வழிபாட்டு தலத்தில் இஸ்லாமிய மதத்தினர் வழிபாடு நடத்திய நிலையில் முகமூடி அணிந்த பாலஸ்தீனர்கள் சிலர் இரவு முழுவதும் வழிபாட்டு தலத்திற்குள் தங்கியுள்ளனர். அவர்கள் கற்கள் மற்றும் தீப்பற்றக்கூடிய பொருட்களையும் மறைத்து வைத்துள்ளனர்.
இஸ்ரேலிய படையினருடன் மோதல்
இன்று காலை யூதர்கள் டெம்பிள் மவுண்ட் வழிபாட்டு தலத்திற்கு வழிபாடு நடத்த வருவதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், நேற்று இரவு அல்-அக்சா மத வழிபாட்டுத் தலத்திற்குள் நுழைந்த இஸ்ரேலிய படையினர் அங்கு தங்கி இருந்த பாலஸ்தீனியர்களை வெளியேற்ற முயன்றுள்ளனர்.
அப்போது, தாங்கள் மறைத்து வைத்திருந்த கற்கள் மற்றும் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு இஸ்ரேலிய படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால், இஸ்ரேலிய படையினருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே இடையே அல் அக்சா வழிபாட்டு தலத்தில் மோதல் ஏற்பட்டது. மோதலின் போது இரு தரப்பிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளது.
ஏவுகணை தாக்குதல்
அல் அக்சா வழிபாட்டு தல மோதலையடுத்து பாலஸ்தீனத்தின் காசா முனையில் செயல்பட்டு வரும் ஆயுதமேந்திய இயக்கமான ஹமாஸ் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
காசா முனையில் இருந்து வீசப்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேல் வான் எல்லைக்குள் நுழைந்தபோது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் ஏவுகணைகள் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாட்டினர் இடையே திடீரென ஏற்பட்டுள்ள மோதல் இரு நாட்டு மக்களிடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது.