ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்ஸில் ஹொலிவூட் நடிகர் பெட்மேன்; வைரலாகும் புகைப்படம்
பெட்மேன் என அழிக்கப்படும் ஹொலிவூட் நடிகர் கிறிஸ்டியன் பேல் கொழும்புக்கும் மாலைதீவுக்கும் இடையில் இயங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
கிறிஸ்டியன் பேலை வரவேற்பதில் மகிழ்ச்சி
நடிகர் கிறிஸ்டியன் யூ. எல் 115 விமானத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பணிக்குழாமினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். இந்நிலையில் புகழ்பெற்ற நடிகரான கிறிஸ்டியன் பேலை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
அவரது பயணத்தில் ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை அவருக்கு வழங்கியதில் எங்களுக்கு முழுமையான மகிழ்ச்சி என்றும், விரைவில் அவரை மீண்டும் வரவேற்போம் என எதிர்பார்க்கிறோம் என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தமது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
பெட்மேன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் கிறிஸ்டியன் பேல், மிகவும் பிரபலமானார்.
மார்வெல் ஸ்டுடியோஸ் திரைப்படமான தோர் லவ் அண்ட் தண்டர் (2022) இல் கோர் தி கோட் புட்சர் என்ற வில்லனாக நடித்தார்.
மேலும் ஒஸ்கார் விருது மற்றும் இரண்டு கோல்டன் குளோப் விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை அவர் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.