பிரித்தானிய பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த இலங்கையர்கள்
நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய பிரித்தானிய பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த இருவர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
அத்தோடு வைரம் பதித்த காதணி மற்றும் வைரப் பதக்கத்தை திருடியதோடு 3,400 ரூபாவையும், கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருடப்பட்ட பொருட்களின் மொத்த பெறுமதி 1,603,400 என ரத்கம பொலிஸில் குறித்த பெண் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொருட்களை கடத்திச் சென்ற சந்தேகநபர்கள் இருவரைப் பற்றிய தகவல்களைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்ய ரத்கம பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.