பிரான்ஸில் 13 வயது சிறுமியை நாசம்செய்த 50 வயது நபர்!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 13 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு மேற்கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 17 ஆம் திகதி அன்று பாரிசில் 10 ஆம் வட்டாரத்தில் வைத்து 13 வயதுடைய சிறுமி ஒருவரை 50 வயதுடைய ஒருவர் பாலியல் பலாத்காரம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் பொலிஸார் மேற்கொண்டு வந்த விசாரணைகளில் குறித்த நபர் மார்ச் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைதான நபர் இதுபோன்ற பல்வேறு பாலியல் குற்றங்களில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டு, பொலிஸாரால் நன்கு அறியப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.