கனடாவில் குடியேற விரும்புவோருக்கு மகிழ்ச்சி செய்தி

கனடாவில் குடியேற காத்திருப்போருக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியொன்றை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடொ வெளியிட்டுள்ளார்.

முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு குடியேறிகளை வரவேற்பதற்கு கனடா தயாராக உள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த நடைமுறைகள் சரியான கிரமமான அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதியில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

23 642bbdadcb3d2

இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட எட்டு குடியேறிகள் கனேடிய எல்லைப் பகுதி நதியொன்றில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த மரணங்கள் பெரும் கவலையளிப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

குடிவரவு முறைமையில் நம்பகத்தன்மையை பேண வேண்டிய கடப்பாடு கனடாவிற்கு உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டவிரோதமான முறைகளில் எல்லைகளை கடப்பதற்கு எத்தனிக்க வேண்டாம் என பிரதமர் ட்ரூடோ அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button