கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவுகள் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி
கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவுகளில் நடைபெற்ற தேர்தலில் முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
தீவுகளில் தேர்தல் பிரச்சாரங்கள் சுகாதார காப்பீட்டினை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் பிரின்ஸ் எட்வர்ட் தீவுகளின் முதல்வர் டென்னிஸ் கிங் கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது.
மொத்தமாக 27 தொகுதிகளில் முதல்வர் டென்னிஸ் கிங், தலைமையிலான முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 22 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.
தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி மொத்தமாக 56 வீத வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளது.
லிபரல் கட்சியினால் மூன்று ஆசனங்களையும் கிரீன் கட்சியினால் இரண்டு ஆசனங்களையும் மட்டுமே வென்றெடுக்க முடிந்துள்ளது.
தற்பொழுது முதல்வர் பதவியை வகித்து வரும் டென்னிஸ் கிங் மீண்டும் பிரின்ஸ் எட்வர்ட் தீவுகளின் முதல்வராக பதவி ஏற்றுக் கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் மக்களுக்கு ஆற்றிய சேவைகளைப் போன்று எதிர்வரும் நான்கு ஆண்டுகளிலும் சிறந்த சேவையை வழங்குவதற்கு உத்தேசித்துள்ளதாக முதல்வர் டென்னிஸ் கிங் தெரிவித்துள்ளார்.