இன்ஸ்டாகிராமில் உலக அளவில் பெரிய சாதனை படைத்த விஜய்
விஜய்
நடிகர் விஜய் இன்று அதிகாரபூர்வமாக இன்ஸ்டாகிராமில் இணைந்து இருக்கிறார். ஏற்கனவே விஜய் ட்விட்டரில் இருந்தாலும் அதில் வருடத்திற்கு ஒன்றிரண்டு பதிவுகள் மட்டுமே போடப்படுகிறது. இருந்தாலும் அந்த பதிவுகளுக்கு மில்லியன் கணக்கில் லைக்குகள் குவிகிறது.
தற்போது லியோ படத்தில் நடித்து வரும் விஜய் இன்று மாலை 4 மணிக்கு இன்ஸ்டாகிராமில் இணைந்தார்.
உலக அளவில் சாதனை
விஜய்யின் அதிகாரபூர்வ இன்ஸ்டா கணக்கிற்கு மிக அதிக அளவில் ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள். தற்போது 99 நிமிடங்களில் 1 மில்லியன் என்ற மைல்கல்லை இது கடந்திருந்தது.
இதன் மூலமாக மிக வேகமாக 1மில்லியன் followers பெற்றதற்காக உலக அளவில் மூன்றாம் இடம் பிடித்து இருக்கிறார் விஜய்.
லிஸ்ட் இதோ
1. பிடிஎஸ் V – 43 நிமிடங்கள்
2. ஏஞ்சலினா ஜோலி – 59 நிமிடங்கள்
3. விஜய் – 99 நிமிடங்கள்
https://youtu.be/MknVtP7nq2M