மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த மீனவர்

மூன்றாவது மாடியில் இருந்து இன்று (03) அதிகாலை நபர் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளதாக அங்குலான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொரட்டுவ, சயுருபுர அடுக்குமாடி குடியிருப்பிலே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

சயுருபுர வீட்டுத் தொகுதியின் மூன்றாவது மாடியில் வசித்து வந்த ரசிக சம்பத் மார்ட்டின் (24) என்ற மீனவரே உயிரிழந்துள்ளார்.

23 642aa11e3d62c

அவரது மனைவி மற்றும் பெற்றோரிடமிருந்து கிடைத்த தகவலின்படி உயிரிழந்தவர் அதிகாலை 2 மணியளவில் மரண இல்லத்திற்குச் செல்வதற்காக கூறிவிட்டுச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் இரவில் வீட்டிற்கு வரும்போது வீட்டிலுள்ளவர்களின் நித்திரைக்கு பாதகம் ஏற்படாதவாறு மூன்றாவது மாடியின் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் நுழைவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக விசாரணைகளின் ஊடாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து நடந்த தினம் வழக்கம் போல் ஜன்னல் வழியாக வீட்டுக்கு வரும்போது விபத்துக்குள்ளானாரா? அல்லது கொலையா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button