ஆல்ப்ஸ் மலை திறந்தவெளி ஹோட்டல் – இணையத்தளத்தில் ரெண்டிங் இதுதான்.!

சுவிஸ் ஆல்ப்ஸ் மலை பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 6,463 அடி உயரத்தில் திறந்தவெளி ஹோட்டல் ஒன்று 2016 ஆண்டு திறக்கப்பட்டது.

இது நல் ஸ்டெர்ன் என்று அழைக்கப்படுகிறது. இங்கு, ஜன்னல் , கதவு, சுவர் என்று எதுவும் இல்லாமல் மலையில் தாங்கி இயற்கை அழகை ரசிக்க வசதியை வழங்குகிறது.

இயற்கை ரசிகர்கள் ஆல்ப்ஸ் மலையில் இருந்து மாலை சூரியனை பார்ப்பதில் தொடங்கி இரவு முழுவதும் திறந்த வெளியில் மலையின் சாரலில் படுத்துக்கொண்டு காலை கண்விழிக்கும்போதே சூரிய உதயத்தை காணும் வாய்ப்பு கிடைக்கும்.

ஆல்ப்ஸ் மலை, திறந்தவெளி ஹோட்டல், இணையத்தளத்தில், ரெண்டிங்

சேவை செய்ய நவீன பட்லர்

அங்குள்ள ‘நவீன பட்லர்’ எனப் பயிற்சி பெற்ற உள்ளூர்வாசி ஒருவர், விருந்தாளிகளுக்குச் சேவை செய்வதற்கும், அதிகக் காற்றில் படுக்கைகளை உருவாக்குவதற்கும் எப்போதும் அருகிலுள்ள ஒரு குடிசையில் வசிக்கிறார்.

ஆல்ப்ஸ் மலை, திறந்தவெளி ஹோட்டல், இணையத்தளத்தில், ரெண்டிங்

மேலும் இந்த ஹோட்டலின் குளியலறை படுக்கையில் இருந்து சிறிது தூரத்தில் உள்ளதாம். இந்த ஹோட்டல் சுவிட்சர்லாந்தின் வெவ்வேறு இடங்களில் ஏழு படுக்கைகளை வழங்குகிறது.

இந்த ஹோட்டலில் தங்குவதற்கு ஒரு இரவுக்கான விலை தோராயமாக £251 சுவிஸ் பிராங்க் என கூறப்படுகின்றது.

அதேவேளை இந்த திறந்தவெளி ஹோட்டல் இணையவாசிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button