துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி பொது மக்களின் காணியில் புத்தர் சிலை வைக்க முயற்சி!

திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் பௌத்த மதகுருக்களால் சிறுபான்மை இன மக்களின் காணிக்குள் அத்துமீறி அடாத்தாக புத்தர் சிலை வைக்க முற்பட்ட போது பதற்றநிலை நிலவியுள்ளது.

துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி பொது மக்களின் காணியில் புத்தர் சிலை வைக்க முயற்சி! | Try To Put Buddha Statue Public Land Trincomalee

இச் சம்பவம் நேற்றைய தினம் (01-04-2023) பொன்மாலைக் குடா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த காணிக்குள் நுழைந்த பௌத்த மதகுரு தனது மெய்ப்பாது காவலுடன் சென்றிருந்த வேலையில் பொது மக்களை மெய்பாதுகாவலன் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் செய்துள்ளார்.

துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி பொது மக்களின் காணியில் புத்தர் சிலை வைக்க முயற்சி! | Try To Put Buddha Statue Public Land Trincomalee

புல்மோட்டை அரிசி மலை விகாரையினை சேர்ந்த பௌத்த மதகுருவே இவ்வாறான சண்டித்தன வாய்த்தகராறில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் குச்சவெளி பிரதேச செயலகம் மற்றும் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் இணைந்து தங்களுக்கு நீதியை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button