திடீரென நடுவானில் தீப்பற்றி எறிந்த ஹாட் ஏர் பலுன்! பரிதாபமாக உயிரிழந்த இருவர்

மெக்சிகோ நகருக்கு அருகில் உள்ள புகழ்பெற்ற தியோதிஹூகான் தொல்பொருள் தளத்தில் பறந்து கொண்டிருந்த ஹாட் ஏர் பலூன் நடுவானில் தீப்பிடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

மெக்சிகோ நகருக்கு அருகில் உள்ள தியோதிஹுவாகன் தொல்பொருள் தளத்தில் பறந்து கொண்டிருந்த வெப்பக் காற்று பலூனில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
23 64295eaf167f8
இதில் இரண்டு பேர் பரிதாபமாகக் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஏர் பலூன் மேலே கிளம்பிய போது, கொஞ்ச நேரத்தில் திடீரென எதிர்பாராத விதமாக அதில் தீப்பிடித்துள்ளது.

இதனால் அதில் இருந்தவர்கள் செய்வதே அறியாமல் குழம்பியுள்ளனர். ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் அச்சத்தில் அவர்கள், பலூனில் இருந்து குதித்துள்ளனர்.

23 64295eaf50a20

இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 39 வயது பெண் மற்றும் 50 வயது ஆண் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மற்றொரு மைனர் சிறுவன் கடுமையான தீக்காயம் ஏற்பட்ட போதிலும், அவர் உயிர் பிழைத்துள்ளார். அந்த மைனர் சிறுவனின் முகத்தில் இரண்டாம் நிலை தீக்காயங்களும், வலது தொடை எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அவர்களின் பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.

23 64295eaf8ff65

மேலும், பலூனில் வேறு பயணிகள் யாரும் இருந்தார்களா என்பது குறித்துத் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்த விபத்து நடந்த தியோதிஹுவாகன் அங்கே இருக்கும் மிக முக்கிய சுற்றுலாத் தலமாகும்.

மெக்சிகோ நகரத்திலிருந்து வடகிழக்கே சுமார் 70km தொலைவில் அமைந்துள்ள தியோதிஹுவாகனில் பல டூர் ஆப்ரேட்டர்கள் இதுபோன்ற ஹாட் ஏர் பலூன் சேவைகளை வழங்குகிறார்கள். அதுபோன்ற ஒன்றில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button